அ. முதிர்ந்த தண்டுத்துண்டுகள்  
மரத்தின் மேல்பரப்பில் மற்றும் மரத்தின் கீழ்ப்பகுதியிலுமிருந்து 1 - 2  செ.மீ விட்டத்தில் உள்ள முதிர்ந்த  தண்டுத்துண்டுகளைச் சேர்க்க வேண்டும். 5000 பி.பி.எம்.  ஐ.ப்.ஏ கலவையில் நேர்த்தி செய்தால் 12 வாரங்களில் 55  %  வேர்விடும். 
ஆ. முதிரா இளம் போத்துகள்  
மறுதளிர்களுக்கும் கிளைகளை சேகரிக்க வேண்டும். மேலே உள்ள முதிரா இளம்  போத்துகளை 4 – 7  செ.மீ நீளமாக வெட்டி 5000 பி.பி.எம் ஐ.பி.ஏ கலவையில் நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு 80  %  ஒப்பு ஈரப்பதத்திலும் 25  – 30o செல்சியஸ் வெப்பநிலையிலும்  போத்துகளை வைத்து பராமரித்தால், 4 – 6 வாரங்களில்  வேர்விடும். பிறகு அதனை நேரடியாக நடு வயலில் நடலாம். 
இ. முளைத்த மொட்டுகள்  
2 – 4  செ.மீ நீளமான இளம் முளைத்த மொட்டுகளில், முதல் இரண்டு இலைகளை காலை  நேரங்களில் நீக்கிவிட வேண்டும். பின்பு அதனை பூஞ்சான் கொல்லயும் மண் புழு உரமும்  கலந்த ஊடகத்தில் நட்டு பனிப்புகை அறையில் வைக்க வேண்டும். நடு வயலில் நடுவதற்கு  முன் அதனைக் கடினப்படுத்த வேண்டும்.   |